2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வகுப்பறையை சுற்றி 25 நிமிடத்தில் வரையப்பட்ட பிரமாண்டமான ஓவியங்கள்

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசிரியர் ஒருவர் 25 நிமிட மதிய போசனை இடைவேளையின் போது வகுப்பறையை சுற்றி வெண் பலகையில் பிரமாண்டமான பல ஓவியங்களை வரைந்து தனது மாணவர்களை ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தியுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மின்னெஸ்டோ நதி பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த கிரகெரி ஈகுலிட் என்பவரே குறுகிய நேர செயற்திட்டமாக இதனை முன்னெடுத்துள்ளார்.

அவர் ஜப்பனிய சுமி மை, வெண் பலகை அழிபான்கள், பேபர் டவல், ஸ்பிரே போத்தல்கள், தூரிகை மற்றும் ஏனைய பல பொருட்களை பயன்படுத்தி தனது வகுப்பறைக்குள் இந்த பிரமாண்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.

மன அழுத்தத்தை குறைப்பதற்காக இவ்வாறான ஓவியங்களை வெண் பலகையில் கீறுவதை வழக்கத்துக்கு மாறான கொள்கையாக தான் கொண்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

பொன் லவர்ஸ் 2012 கிரமி வெற்றி விருது அல்பத்தின் முகப்பு அட்டையை இவரது ஓவியங்கள் அலங்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .