2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சக்கரத்துடன் வலம் வரும் 23 வயது ஆமை

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னங்காலொன்றை இழந்த ஆமையொன்று சிறிய சக்கரத்தின் துணையுடன் தனது பயணத்தை மிக வேகமாக ஆரம்பித்துள்ள காட்சி பலரை கவர்ந்துள்ளது.

இதனால் மிக வேகமாக செல்லும் ஆமை என்ற பெயரை அது தனதாக்கிகொண்டுள்ளது.

பிரிட்டன், கொஸ்போர்ட்டை சேர்ந்த ஸ்ரேண்ட் என்ற 49 வயதுடைய நபரொருவர் தனது வீட்டில் ஆமையொன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த ஆமைக்கு தற்போது 23 வயதுதான் ஆகின்றது.

ஒருநாள் இந்த ஆமையானது குறித்த நபரின் பூந்தோட்டத்தில் உள்ள நிலத்தடி நீருக்கு சென்றபோது அதனது முன்னங்காலை எலியொன்று கடித்துவிட்டது.

எலி கடித்ததினால் முன்னங்காலால் நடக்க முடியாது கிடந்த ஆமையை கண்டு அதனது உரிமையாளர் மிகவும் துயரமடைந்தார்.

ஆமையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக அதனது முன்னங்காலில் சிறிய சக்கரமொன்றை பொருத்த நினைத்த அவர் அதனது முன்னங்காலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டு சிறிய சக்கரத்தையும் பொருத்தினார்.

தற்போது எனது வளர்ப்பு பிராணி மிக வேகமாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஓரிரு வாரங்களிலே அது வழமைக்கு திரும்பிவிட்டது' என ஆமை குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த ஆமையால் எந்த பக்கமும் திரும்ப முடியும். பின்நோக்கி நகர முடியும். இதற்கு முன்பு அதனால் சில விடயங்களை செய்ய முடியாது.  இப்பிராணி மிகவும் சிறியது. அதேபோல் அன்புடன் பழகக்கூடியது' என இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் தெரிவித்துள்ளார்.

எனது தந்தை ஆமையை தூக்கிக்கொண்டு வரும்போது அதனது கால்கள் முழுவதிலும்; புழுக்கள் மொய்த்துக் கிடந்தன. உண்மையில் இது அதிஷ்டம் நிறைந்தது என அந்நபரின் மகள் டெபி ஆமை குறித்து தெரிவித்துள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .