2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சீனாவில் 220 அடுக்கு மாடிகளை கொண்ட கட்டடம் நிர்மாணம்

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலே மிக உயரமான கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 'ஸ்கை சிட்டி'  என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடம் 220 அடுக்குமாடிகளை கொண்ட கட்டடமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான கட்டுமான பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துபாயில் 828 மீட்டர் உயரத்தில் காணப்படும் 'புர்ஜ் கலீபா' என்ற கட்டமே தற்போது உலகில் மிக உயரமான கட்டடமாக காணப்படுகின்றது. இதனது சாதனையை முறியடிக்கும் வகையில் 2,749 அடி உயரம் கொண்டதாக சீனாவில் மேற்படி கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

90 நாட்களில் கட்டி முடிக்கப்பட்வுள்ள இக்கட்டடமானது ஜனவரி மாதம் ஆரம்பித்து மார்ச் மாதம் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு நாளில் ஐந்து மாடிகளை நிர்மாணிப்பதற்கு கட்டடவியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

புர்ஜ் கலீபா கட்டிடத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட கட்டடவியளாலர்களே 'ஸ்கை சிட்டி' யின் நிர்மாணப் பணியிலும் ஈடுபடவுள்ளனர்.

'புர்ஜ் கலீபா' கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 5 வருடங்கள் எடுக்கபட்டுள்ளது. 79,617 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் 20 கட்டடங்கள் உயரமான கட்டடங்களாக காணப்படுகின்றன. இவற்றில் 9 கட்டடங்கள் சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .