2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஹீலியம் நிரப்பப்பட்ட 200 பலூன்களுடன் 600 அடி உயரத்தில் பறந்த நபர்

Kogilavani   / 2013 ஏப்ரல் 08 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


துணிச்சல்மிக்க தென்னாபிரிக்கர் ஒருவர் ஹீலியம் நிரப்பப்பட்ட 200 பலூன்களின் துணையுடன் சுமார் 600 அடி உயரமான பகுதியை கடந்த சம்பவம் ஒன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இவர்  தீவிலிருந்து 600 அடி உயரத்தை  பலூன்களின் துணையுடன் பறந்த நிலையில் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன் காட்சி ஒன்றுக்காக ஒஸ்கார் விருதை வென்றவ மட் சில்வர் வலன்ஸ் என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 18 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரொபின் தீவையே இவ்வாறு கடந்துள்ளார்.

தென்னாபிரிக்கா, ஜோன்ஸ்பெர்க் நகரில் உள்ள நெல்சன் மண்டேலா சிறுவர் வைத்தியசாலைக்கு உதவுவதற்காக நிதிசேகரிக்கும் நோக்கில் அவர் இந்த துணிச்சல்மிக்க முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள்  ஜனாதிபதி நெல்சன் மண்டேலா உடல்நலக் குறைப்பாடு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பிய நிலையில் வலன்ஸ் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .