2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காதலியை உறங்கவைத்து 2 வருடங்கள் துஷ்பிரயோகம்; காதலன் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது காதலிக்கு தூக்க வில்லைகளை வழங்கி அவர் உறக்கத்தில் ஆழ்ந்ததும் காதலியின் விரல் நகங்களுக்கு நகப்பூச்சிட்டும் நகைகளை அணிவித்தும் அவரை கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த காதலனை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 27 வயதான நவோமி ஹெம்ப்சன், தனது காதலன் ரொபர்ட் பிறையரிடம் சிக்கி கடந்த இரண்டு வருடங்களாக உறக்கத்திலேயே தனது கற்பைப் பறி கொடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரான ரொபர்ட், தினமும் தனது காதலிக்கு இரவில் தூக்க வில்லைகளைக் கொடுத்து தூங்க வைத்து விடுவாராம். நவோமி ஆழ்ந்த தூக்கத்திற்குப் போன பின்னர் அவரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்து உறவு கொண்டு வந்துள்ளார். மேலும் இதை கைத்தொலைபேசியிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை தனது கணினியிலும் பதிவு செய்து வைத்துள்ளாராம்.

துஷ்பிரயோகத்துக்கு முன்னர், தனது காதலியின் விரல் நகங்களுக்கு நகப்பூச்சு போட்டும், நகைகளை அணிவித்தும் அலங்காரப்படுத்திய பின்னரே அவருடன் உறவு கொண்டுள்ளாராம் ரொபர்ட்.

காலையில் கண் விழித்துப் பார்க்கும் நவோமிக்கு தன் உடலில் நகைகள் இருப்பதும், நகப்பூச்சு போடப்பட்டிருப்பதும் குழப்பத்தை தந்துள்ளது. இதுகுறித்து ரொபர்ட்டிடம் கேட்டால், ஏதாவது பதில் சொல்லி சமாளித்துவிடுவாராம்.

இந்த நிலையில்தான் ரொபர்ட் குறித்து பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. நவோமியும் ரொபர்ட்டும் தங்கியுள்ள வீட்டுக்கு திடீரென உட்புகுந்துள்ள பொலிஸார் ரொபர்ட்டைக் கைது செய்துள்ளனர். இதன்போதே, தனது காதலனின் இரகசியங்கள் நவோமிக்கும் தெரியவந்துள்ளதாம்.

இதுகுறித்து நவோமி கூறுகையில், 'அவன் எனது காதலனே இல்லை. சாத்தான். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்துள்ளான். பொலிஸார் மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அழிந்தே போயிருப்பேன்' என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ikmsm Tuesday, 04 December 2012 06:02 AM

    திருமணம் எனும் புனித உறவு ஒன்றிருக்க, தமது கால்களுக்கு இடையில் இருக்கும் அந்த காம இச்சைகளை அருவருக்கத்தக்க முறையில் தீர்துக்கொள்ள இந்த ஆண்களும் பெண்களும் அதை "காதல்" "காதல்" என்று ஒரு புனைப்பெயரை சூட்டி சந்தி பொந்துகளுக்கெல்லாம் சென்று அதை தீர்துக்கொண்டு பின்பு தத்துவம் கூட பேசுவார்கள். கடைசியில் முடிவு இதுதான். காதல் என்று சென்றவர்களை கடைசியில் கைநழுவி விடுவதுதான் அனேக முடிவு. அதையும் மீறி அதனால் திருமணம் வரை சென்றவர்கள் பிறகு மறுமணம்தான் முடித்துள்ளார்கள். இதற்கு இப்படி சொல்வார்கள்.... போகாத போக்கு போனால் வராத வருத்தம் வரும் என்று. இன்னும் சொல்லப்போனால் .. பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்றும் சொல்லுவாங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .