Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்கேரியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருருத்தி தனது கன்னித்தன்மையை பகிரங்க ஏலத்தில் விற்கப்போவதாக அறிவித்துள்ளாள்.
இணையத்தளம் மூலம் நடத்திய ஏலத்தில் பிரிட்டனைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவருக்கு அவளின் கன்னித்தன்மையை விற்கப்படவிருந்தது. எனினும், அந்த செல்வந்தர் தன்னைத் திருமனம் செய்துக்கொள்ளும்படி மாணவியை கேட்டதால் அந்த ஏல உடன்பாட்டை அம்மாணவி இரத்துச் செய்துள்ளாள்.
17 வயதான எனும் இந்தச் சிறுமி, தனது தாயின் வீட்டை அடமானத்தில் மூழ்குவதிலிருந்து மீட்டெடுப்பதற்காக இந்த செயலை மேற்கொண்டுள்ளாள். ஆபத்திலிருந்து மீட்கும் ஒருவரையே தான் தேடியதாகவும் ஒரு கணவரை அல்ல என்றும் அவள் தெரிவித்துள்ளாள். தன்னை "மிஸ் ஸ்பிரிங்" என அவள் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாள்.
ஈபே எனும் இணையத்தளத்தில் நடைபெற்ற இம்மாணவியின் கன்னித்தன்மைக்கான ஏலம் 1,00,000 ஸ்ரேலிங் பவுண்களை எட்டியவுடன் நிறுத்தப்பட்டது.
ஆனால், முதல் ஏலம் வெற்றியளிக்காததால் மீண்டும் ஹங்கேரி தொலைக்காட்சியொன்றின் மூலம் அடுத்த வாரம் ஏலம் தொடங்கவுள்ளது.
தனக்கு ஒருபோதும் காதலன் இருந்ததில்லை எனவும் தான் வடக்கு ஹங்கேரியில் தாயுடன் வசித்த வசித்தாகவும் அவள் கூறியுள்ளாள்.
"இது ஒரு பிழையான விடயம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு இரவு மட்டும்தான்; இது சற்று ரொமான்டிக்கானது. ஏனென்றால் அந்த மனிதன் எனக்கு பணம் செலுத்துகிறார். அந்தப்பணம் வீடற்ற எனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக உதவப்போகிறது. ஆக அந்த மனிதன் எனது குடும்பத்தை பாதுகாத்தவராக விளங்குவார்.
நான் அந்த பிரிட்டிஷ் மனிதருடனான தொடர்பை முறித்துவிட்டேன். காரணம் அவருக்கு மேலும் அதிக தூரம் செல்ல வேண்டுமாம். நான் ஒரு கணவனை எதிர்பார்க்கவில்லை. நான் இதை எனது குடும்பத்திற்காகத்தான் இதைச் செய்கின்றேன் என அவள் கூறியுள்ளாள்.
அந்தச் சிறுமி வலைப்பூ ஒன்றின் மூலம் இந்த ஏலம் பற்றி முதலில் அறிவித்தாள். அதற்கு அதிகளவானோரிடமிருந்து பதில் கிடைத்ததாம்.
இது தொடர்பாக இந்த யுவதி மேலும் கூறுகையில், "நான் வலைப்பூ ஒன்றை எழுத ஆரம்பித்தேன். ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்கள் மின்னஞ்சல் அனுப்பவும் விலைக் கூறவும் ஆரம்பித்துவிட்டனர். அதையடுத்து என்னால் இவ்விடயத்தை தாயிடமிருந்து மறைக்க முடியாது என உணர்ந்தேன். வீட்டில் நாம் இருவருமே பெரியவர்கள்.
நாம் இருவரும் எனது சிறிய தம்பியை பராமரிப்போம். அனுக்கு வயது 20 மாதங்களே ஆகிறது.
எனவே எனது திட்டத்தை ரகசியமாக வைத்துக்கொள்வது முறையற்றது. எனது திட்டம் குறித்து எனது தாயிடம் கூறினேன். அதைக் கேட்டவுடன் எனது அன்னை அதிர்ச்சியடைந்தார். என்னை அதை செய்ய வேண்டாம் என்ற கெஞ்சினார். ஆனால் அதை மேற்கொள்ளா விட்டால் எப்படி எங்கள் வீட்டை மீட்க முடியும்?
ஊடகப் பரபரப்பு ஆரம்பமாகிவிட்டதால், சிலர் என்னை தியாகி என்றோ நடத்தைக் கெட்டவள் என்றோ கூறக்கூடும். ஆனால் நான் இதில் எதுவும் இல்லை. நான சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் தனது குடும்பத்தை பராமரிக்க விரும்பு ஒரு யுவதி" எனத்தெரிவித்துள்ளாள்.
Mohamed Tuesday, 10 August 2010 02:59 PM
திருமணம் என்பது ஒப்பந்தம் தானே.ஒரு பெண் தனது கற்புக்காக எவ்வளவும் கேட்பாள். விரும்பியவர் கொடுத்து வாழலாம். இருவருக்கும் பிடிக்காவிட்டால் பிரியலாம்.
Reply : 0 0
xlntgson Tuesday, 10 August 2010 08:43 PM
சீதனக்கொடுமை என்று தெற்காசிய நாடுகளில் திருமண பந்தங்களில் பிளவை உண்டு பண்ணினவர்கள் இம்மாதிரியான 'பணம் தேவை, கன்னித்தன்மைக்கு', என்ற விளம்பரங்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இது விபசாரமா அல்லது சீதனம் போன்றதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
2 hours ago