Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேர்பியாவில் பாடசாலை மாணவியொருவரின் கைகள் காந்தத்தைப் போன்று உலோகங்களை ஈர்க்கும் சக்தியுடன் விளங்குகின்றன. இந்த அபூர்வ தன்மை மருத்துவ நிபுணர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
10 வயதுடைய ஜெலினா மொம்சிலோவ் எனும் சிறுமியே இவ்வாறு காந்தக் கைகளுடன் விளங்குகிறாள்.
இச்சிறுமி தனது வீட்டில் காணப்படும் சமையல் உபகரணங்கள், நாணயஙகள் என்பவற்றை தொடும்போது அவரின் கைகளில் அந்த பொருட்கள் ஒட்டிக்கொள்கின்றன.
5 வருடங்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு இந்த காந்த சக்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தற்போது புகழ்பெற்ற நிஸ் பல்கலைக்கழகமானது இந்த வியப்புக்குரிய காந்த சக்தி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
பல்கலைக்கழக பேராசிரியர் பெவல் பிரிமூவிக் இது குறித்து கூறுகையில், 'இது இதுவரை அறியப்படாத உயிரியல் பொறியியல் ஆச்சரியமாகும். இது தொடர்பான ஆய்விற்கு இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பலர் தேவைப்படுவர்' என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
2 hours ago