2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

லொத்தர் மூலமாக 719 கோடி ரூபாவை வென்ற தம்பதி

Kogilavani   / 2012 ஜனவரி 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லண்டனைச் சேர்ந்த தம்பதியொன்று அதிஷ்டலாப சீட்டு மூலமாக 40 மில்லியன் யூரோ பணப்பரிசை வென்றுள்ளது.

கத்தரின் புல்(35) மற்றும் அவரின் கணவரான புல் (40) ஆகியோர் 'யூரோ மில்லியன்ஸ்' அதிர்ஷ்ட லாப சீட்டு மூலமாக 40,627,241 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள்  (சுமார் 719 கோடி இலங்கை ரூபா) கிடைத்துள்ளன.

கத்தரினின் கணவரான புல் (வயது 40) கட்டுமான தொழிலை மேற்கொண்டு வருபவர். இவர் ஒரு நாள் மழை வந்த போது தனது தொழிலை இடைநிறுத்திவிட்டு மேற்படி அதிஷ்டலாப சீட்டை வாங்கிய நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மறுநாளான கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு ஜக்பொட் பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து இத்தம்பதியினர் தமது மகன்களுக்கும் தெரிவிக்காமல் வார இறுதி விடுமுறையை கால்பந்தாட்டப் போட்டிகளை பார்வையிடுவதிலும், பிறந்தநாள் கொண்டாட்டதிலும்  கழித்துள்ளனர். அதன் பின்னரே தமது மகன்களுக்கு ஜக்பொட் பரிசு குறித்து அவர்கள் அறிவித்தனராம்

'இந்த லொத்தர் சீட்டானாது பணத்தை வீன்விரயமாக்குகிறது என்றும் லொத்தர் சீட்டு வாங்குவதை நிறுத்திவிடும்படியும் எமது மூத்த மகன் அறிவுறுத்துவான். தற்போது அவன் இதற்கு கட்டாயம் ஏதேனும் கூறியாக வேண்டும்' என கத்தரின் புல் தெரிவித்துள்ளார்.

மேற்படி தம்பதியினரிடம் ஏற்கனவே கனவு இல்லமொன்று உள்ளது. ஆனால் அவர்கள் வேறு வீடொன்றுக்கு மாறும் எண்ணம் இல்லையாம்.

ஆனால் அவர்கள் விடுமுறைகளை கழிபப்தற்காக வெளிநாடொன்றில் வீடொன்றை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். தாம் ஷொப்பிங் செய்வதை வெறுப்பதாக கத்தரின் புல் கூறுகிறார்.


You May Also Like

  Comments - 0

  • Kethis Thursday, 26 January 2012 09:52 PM

    719 கோடி ரூபா பரிசா?

    Reply : 0       0

    shahusu Saturday, 28 January 2012 04:28 AM

    எத்தண பேர் எதிர்பாத்து போட்ட பிச்சையோ..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .