Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 18 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரியாவில் நடைபெற்ற சேற்று விளையாட்டு விழாவில் சுமார் 30 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
களிமண் மூலமான அலங்கார பொருட்கள் தயாரிப்புத் தொழில் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்த சேற்றுத் திருவிழா நடைபெறுகிறது.
14 ஆவது வருடமாக நடைபெற்ற இச் சேற்று விளையாட்டு விழாவின் பெருந்திரளானோர் சேற்றில் ஆடிப்பாடி, சேற்றில் விழுந்து புரண்டு மகிழ்சியை வெளிப்படுத்தினர். சேற்று நீச்சல், சேற்று மல்யுத்தப் போட்டிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட ஆங்கில ஆசிரியர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், இது மிகவும் சிறப்பான பெருவிழா. சிறார்களைப் போன்று நடந்துகொண்டமைதான் இவ்விழாவின் சிறப்பம்சம்' என்றார்.
சுமார் 50,000 உல்லாசப் பயணிகளும் இதில் கலந்துக்கொண்டனர். இதன்மூலம் 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது.
உல்லாச பயணிகள் அமைச்சின் தலைவர் இதுக் குறித்து தெரிவிக்கையில், வெளிநாட்டவர்கள் இந்த நிகழ்வையிட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் அவர்களால் வித்தியாசமான செயற்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ள முடிந்தது. அத்துடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்களுடன் ஒன்றிணைய அவர்களால் முடிந்தது' எனக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
53 minute ago
1 hours ago