2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பெண்ணின் வயிற்றில் 18அடி நீள நாடாப்புழு

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவரின் வயிற்றிலிருந்து 18 அடி நீளமான நாடாப்புழுவொன்றை வைத்தியர்கள் சத்திர சிகிச்சையொனறின் மூலம் அகற்றியுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த லீ (வயது 30) என்பவரினுடைய வயிற்றிலிருந்தே இத்தகைய நீளமான நாடாப்புழு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஆசியாவின் தென்கிழக்கு பகுதிக்கு விடுமுறைக்கழிப்பதற்காக பிரயாணித்த வேளை சமைக்கப்படாத மாட்டிறைச்சிறை உணவாக உட்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் மலம் கழிக்கும் போது எப்போதும் இல்லாதவாறு சில திரவங்கள் வெளியேறுவதை அவதானித்துள்ளார்.

உடனடியாக சீனாவின் வுஜியன் மாகாணத்தில் உள்ள வைத்திசாலையின் வைத்தியர் கிஷியமெனை சந்தித்து இது குறித்து தெரிவித்துள்ளார்.

இவரை பரிசோதித்த வைத்தியர் சமைக்கப்படாத மாட்டிறைச்சியை உட்கொண்டதால் வயிற்றில் நாடாப்புழு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் இதனால் குடல் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

பின்னர் சிகிச்சைகளின் பின்னர் 18 அடி நீளமான நாடாப்புழு இவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இறைச்சி வகைகளை சமைக்காது உட்கொண்டால் நாடாப்புழுக்கள் ஏற்படும். இது அகற்றப்படாவிட்டால் அது முட்டையிட்டு குடலிலேயே அந்த உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியங்களும் உண்டு என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .