2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விபத்தில் கர்ப்பிணி வயிற்றிலிருந்த சிசு 3 மீற்றர் தூரம் வீசப்பட்டு உயிர்பிழைப்பு

Menaka Mookandi   / 2014 மார்ச் 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


மோட்டார் சைக்கிளொன்றை லொறி மோதியதில் கர்ப்பிணி ஒருவர் தனது கணவனுடன் பலியாகியுள்ளார். ஆனால், லொறி மோதிய வேகத்தில் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு, 3 மீற்றர் வீசியெறியப்பட்டு உயிர் பிழைத்த அதிசய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூஜியான் மாகாணம் ஜியாமென் நகரத்தை சேர்ந்த தம்பதி ஷாவோ, டியூவான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டியூவானுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லொறியொன்று மோதியுள்ளது. இதன்போது, இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஷாவோ உயிரிழந்தார். மேலும், லொறி  மோதிய வேகத்தில் நிறைமாத கர்ப்பிணியான டியூவான் வயிற்றில் இருந்து குழந்தை அப்படியே நழுவி சுமார் 3 மீற்றர் தொலைவில் த}க்கியெறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அலறியுள்ளனர். உடனடியாக ம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து சிசுவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தலை மற்றும் முதுகில் பலத்த காயங்களுடன் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த அதிசய குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நேரில் வந்து பார்த்துச் செல்கின்றனர். மிகவும் பயங்கரமான விபத்தில் உயிர் தப்பிய குழந்தை உடல் நலம் பெற வேண்டும் என்று சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

You May Also Like

  Comments - 0

  • aroos Sunday, 23 March 2014 01:11 AM

    மனிதன் பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .