2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

300 பெண்களுடன் உறவு கொண்ட சாரதி

Gavitha   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எயிட்ஸ் இருப்பது தெரிந்து கொண்டே சுமார் 300 பெண்களுடன் உடலுறவு கொண்ட முச்சக்கரவண்டி சாரதியை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹைதராபாத்தின் மல்கஜ்கிரி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கேரளாவை பூர்விகமாக கொண்டவர் என்றும் பல வருடங்களடாக முச்சக்கரவண்டி செலுத்துநராக இருந்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஹைதராபாத் பொலிஸார் குறித்த நபரை கைது செய்திருந்தனர். பின்னர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னுடைய சுயரூபம் பற்றி அவர் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.

'எனக்கு 3 தடவைகள் திருமணமாகியுள்ளது. ஆனால் பெண்களுடன் எனக்கு இருந்த பல தொடர்புகள் மற்றும் குடி பழக்கம் காரணமாக எனது மூன்று மனைவிகளும் என்னை விட்டு சென்று விட்டனர்.

எனக்கு தினமும் விபசார விடுதிக்கு செல்லும் பழக்கம் இருந்தது. இது தவிர நான் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்வதால், குடும்பத்தலைவிகளுடனும் எனக்கு தகாத உறவு இருந்தது.

சமீபத்தில்தான் எனக்கு எயிட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. ஆயினும் பெண்களுடன் பழக்கம் வைத்திருப்பதை நான் நிறுத்தவில்லை. இப்படியே சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் நான் உடலுறவு கொண்டிருந்தேன். இவ்வாறு என்னுடன் பழகும் அனைத்து பெண்களுக்கும் எயிட்ஸ் நோயை பரப்பி வந்தேன்' என்று அந்த சாரதி வாக்குமூலமளித்துள்ளாராம்.

இதேவேளை, இந்த நபருடன் பழகிய குடும்பப்பெண்கள், தங்களுக்கும் எயிட்ஸ் நோய் வந்திருக்கோ என்ற அச்சத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அப்படியே வாயடைத்து போய் இருக்கின்றார்களாம். எனினும் அந்த பெண்கள் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படியானால், அந்த குடும்பப்பெண்களின் கணவன்மார்களிள் கதி அதோ கதிதான்...


You May Also Like

  Comments - 0

  • Suthan Friday, 23 October 2015 07:34 AM

    valuable information

    Reply : 0       0

    Suthan Friday, 23 October 2015 07:35 AM

    valuable information

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .