Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க மியூசியம் ஒன்றில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பழமையான குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்ததிகள் பெரு நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த குரங்கின் மாதிரி ஒன்று, தவறான பெயரிடப்பட்டு நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
2008ஆம் ஆண்டே அதுபற்றிய சந்தேகம் அடைந்ததாக குரங்கை முதலில் கண்ட ஆய்வாளர் சி.பிர்னியஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இதே போன்றதொரு குரங்கை ஜான் வெர்மீர் எனும் விலங்கியல் ஆய்வாளர் தலைமையிலான குழு, பெரு நாட்டின் காட்டில் கண்டுபிடித்துள்ளது.
'டிட்டி' என அழைக்கப்படும் இந்த குரங்கு குட்டி, செந்நிறமானதாம். வீட்டு பூனையைவிட குட்டியான இந்த குரங்கு, பழங்களை உண்ணும் பழக்கம் கொண்டதாம். ஏனைய குரங்குகளின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்ற பழக்கம் இக்குரங்குகளுக்கு காணப்படுகின்றதாம்.
பெண் குரங்குகள் மற்ற குரங்குகளைப் பார்த்துக் கொள்கின்றன. ஆண் குரங்குகள் மற்ற குட்டிகளை வளர்க்கும் பொறுப்பை மனிதர்களைப் போலவே செய்யும் குணம் கொண்டதாம்.
தற்போது அதற்கு கேலிசிபஸ் உரும்பம் பென்சிஸ் எனும் லத்தீன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரு நாட்டில் உரும்பம்பா நதியோரத்தில் இந்த குரங்குகள் காணப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago