Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தானில் வாய் பேசாத, காது கேளாத பெண் கடத்தி செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 17 வயது சிறுமி சம்பவ நாளன்று வீட்டருகே உள்ள கடைக்கு சென்ற போது ஐவர் கடத்தி சென்று மாற்றி மாற்றி வன்புணர்வுக்கு உட்படுத்தி மாலை 5 மணிக்கு கடத்திய இடத்திலேயே பெண்ணை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
சிறுமியால் பேச முடியாது என்பதால் இதனை எப்படி கூறுவது என தெரியாமல் இருந்துள்ளார். ஆனால் சம்பவத்திற்கு பிறகு சிறுமி உடலநலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுமியின் தாய் இதுகுறித்து பொலிஸாரிடம் புகார் அளிக்க, அந்த கும்பலை சேர்ந்த 5 பேர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
42 minute ago
42 minute ago
3 hours ago