Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லோருக்கும் பயணம் செய்வதென்றால் அலாதிப்பிரியமாகவே இருக்கும். அதிலும், பொதுப்போக்குவரத்தில் யன்னல் ஓரமாக அமர்வதற்கு இருக்கை கிடைத்துவிட்டால் எந்த தொந்தரவும் இருக்காது.
ரயில் பயணங்கள் என்றால் சொல்லவா வேண்டும். இடையிலேயே, கொரிப்பதற்கு எதாவது வாங்கிக்கொள்ளலாம். பஸ்களில் கொரிக்க கிடைக்காமல் இல்லை. எனினும், நீண்டதூரத்துக்கான பயணத்தின் போது, அதற்கான அனுபவம் கிடைக்கும்.
இவற்றுக்கெல்லாம் மேலே, விமானங்களின் பயணம் செய்ய விருப்பம் இல்லாதவர்கள் இருக்கவே மாட்டார்கள், அதிலும் பலரும் யன்னல் ஓரத்தில் இருக்கை கிடைக்கவேண்டுமென வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டியும் கொள்வர்.
அப்போதுதான் மேகங்களுக்கு உள்ளிருந்து பூமியை பார்க்க முடியும். சிலவேளைகளில் மேகங்கள் தங்களுடைய முகங்களை மோதிக்கொண்டு செல்வதைப் போலவே இருக்கும்.
எனினும், யன்னல்களே இல்லாத விமானம் ஒன்றை பற்றி எத்தனை பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். அந்த கதையை இப்போது பார்ப்போம்.
ஜன்னல் இல்லாத தொடு திரை விமானம் உலகிலேயே முதன்முறையாக விரைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக்கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான் வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது,
எதிர் காலத்தில் தயாரிக்கப்படும் விமானங்களில் எரிடிபாருள் செலவையும் விமானத்தின் எடையையும் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
5 hours ago
7 hours ago