2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாணவியின் அந்தரங்கத்துக்குள் சிணுங்கிய அலைபேசி சிக்கியது

Kogilavani   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவியின் அந்தரங்க உறுப்புக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த அலைபேசி, சத்தத்துடன் சிணுங்கியமையால், அந்த மாணவி கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சம்பவமொன்று, தென் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குள், மாணவர்கள் அலைபேசி வைத்திருந்தால் அல்லது உபயோகித்தால், அந்த அலைபேசி, பாடசாலைச் சொத்தாக அபகரிக்கப்படும்.
அவ்வாறு சுவீகரிக்கப்படும் அலைபேசியில், ஆபாசப் புகைப்படங்கள் அல்லது வீடியோக் காட்சிகள் காணப்படுமாயின், அந்த அலைபேசியை வைத்திருந்த மாணவருக்கு, இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்படும் என்பதே, அம்மாகாணத்தில் நடைமுறையில் உள்ளது.

இதேவேளை, மாணவத் தலைவியொருவரோ அல்லது, மாணவத் தலைவரொருவரோ அலைபேசி உபயோகித்தால், அந்த அலைபேசியும் பறிமுதல் செய்யப்படும் அதேவேளை, அம்மாணவத் தலைவருக்கு வழங்கப்படும் தண்டனையும் அதிகபட்சமானதே.
இது, அம்மாகாணமொன்றைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கவிதியாகும்.

அப்பாடசாலையில், இவ்வாறான ஒழுக்கவிதி பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையிலும், பாடசாலை நேரத்தில் வகுப்பொன்றில் பாடத்தை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையொருவருக்கு, அவ்வகுப்புக்குள்ளிருந்து அலைபேசியொன்று ஒலிக்கும் சத்தமொன்று, கேட்டுள்ளது. உடன் நடவடிக்கை எடுத்துள்ள ஆசிரியை, அலைபேசிச் சத்தம் கேட்கும் இடத்தை நோக்கிச் சென்றுள்ளார். அது, மாணவியொருவர் அமர்ந்திருந்த இடமாகும். இருப்பினும், அவ்விடத்தில் அலைபேசி இருக்கவில்லை.

அதனால், அந்த அலைபேசி, அங்கிருந்த மாணவியொருவரின் சீருடைக்குள்ளிருந்தே ஒலியெழுப்புவதாக எண்ணிய ஆசிரியை, அம்மாணவியை,  இருக்கையிலிருந்து உடனே எழும்புமாறு உத்தரவிட்டார். காரணம், அம்மாணவி எழும்போது, அலைபேசி கீழே விழும் என்று அவ்வாசிரியை எதிர்ப்பார்த்தார்.

இருப்பினும், தொடர்ந்து அழைப்பொலி எழுப்பிக்கொண்டிருந்த அந்த அலைபேசி, கீழே விழவில்லை. இதனால், உடன் நடவடிக்கை எடுத்த அந்த ஆசிரியை, அம்மாணவியை தனியானதொரு அறைக்குள் அழைத்துச் சென்று சோதனையிட்டார். இதன்போது, அம்மாணவியின் உள்ளாடைக்குள் இருந்து, அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பாடசாலையில் நடைமுறையில் உள்ள ஒழுக்கவிதிகளுக்கு ஏற்ப, அம்மாணவியும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X