Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
J.A. George / 2022 ஜனவரி 25 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் அமைதியாக அவர்களுடைய மின்னஞ்சல் ஸ்பேமில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருக்கும்.
டிஜிட்டல் உலகத்தில் ஸ்பேம் மெயில்கள் என்று கூறப்படும் குப்பை மின்னஞ்சலில் ஒரு அமெரிக்கப் பெண்ணுக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் லொட்டரி கிடைத்த மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த லாரா ஸ்பியர்ஸ் என்ற பெண் 3 மில்லியன் அமெரிக்க டொலர் லொட்டரியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் வெற்றி பெற்ற மின்னஞ்சல் அவருடைய மின்னஞ்சல் இன்பாக்ஸில் டெலிவர் ஆகவில்லை.
அதற்கு பதிலாக அவருடைய ஸ்பெம் பாக்ஸ் அதாவது பொதுவாக சந்தேகப்படும்படியான மெயில்களில் நேரடியாக ஸ்பெம் பாக்சிற்கு டெலிவரி ஆனது.
லாரா லொட்டரி வெற்றி பெற்ற செய்தியும் அவருடைய மின்னஞ்சலில் ஸ்பேம் பாக்ஸில் தான் காணப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்பேம் மெயில்களை படிக்கும் பழக்கம் பலருக்கும் கிடையாது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு மின்னஞ்சலை தேடி தன்னுடைய ஸ்பேம் பாக்ஸில் பார்க்கும் போது, லாராவுக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொர்கள் பரிசாக வெற்றி பெற்றிருப்பதை அறிந்திருக்கிறார்.
லாராவின் லொட்டரி தொகை 1 மில்லியன் டொலர். ஆனால், லாரா மெகாபிளையேர் என்பதையும் வைத்திருந்ததால் அந்த பரிசு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு லாராவுக்கு 3 மில்லியன் டொலர் பரிசாகக் கிடைத்தது.
லாட்டரி பற்றி எப்படி தெரிந்து கொண்டார் என்று லாரா கூறுகையில், ‘மெகா மில்லியன் ஜாக்பாட் லொட்டரி தொகை அதிகரித்து வருவதாக ஃபேஸ்புக்கில் அதைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். எனவே நானும் ஒரு கணக்கைத் தொடங்கி எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கினேன். பிறகு பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
திடீரென்று வேறு ஏதோ ஒரு மின்னஞ்சலை தேடிக்கொண்டிருக்கும் பொழுது என்னுடைய ஸ்பேம் பாக்ஸில் லொட்டரி பரிசு வென்றிருப்பதாக ஒரு மெயில் வந்திருந்தது.
அந்த மின்னஞ்சலைப் படிக்கும்போது என்னுடைய லாட்டரி கணக்கில் லாகின் செய்து பார்த்ததும், உண்மையிலேயே நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
ஒருவேளை அவருடைய ஸ்பெம் பாக்ஸைப் பார்க்காமல் இருந்தால், அவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வென்றிருப்பது தெரியாமலே போயிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago
22 Dec 2024