Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய மனைவிக்கு, கனவில் உதைத்த கணவன், காலில் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தினால், அவருடைய வலது காலிலேயே காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்ணாடி வெட்டிய காயங்களுடன், கடுமையாக, இரத்தம் வெளியேறிய கொண்டிருக்க, நள்ளிரவு வேளையில், ஆண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் வாட்டில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், பக்கத்து கட்டிலில் இருந்தவரிடம் தன்னுடைய காயம் தொடர்பில், விபரித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற அன்றிரவு, வீட்டிலுள்ள கட்டிலில் நான், உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய மனைவிக்கும் எனக்கும் இடையில், கடுமையான சண்டை ஏற்பட்டது. அதாவது, கனவிலேயே சண்டைப்பிடித்துகொண்டோம்.
சண்டை முற்றிபோனமையால், மனைவியை ஒரே உதையாக உதைத்துவிட்டேன். கொஞ்சநேரத்தில் என்னுடைய வலதுகால் வலித்தது. எழும்பி பார்த்தபோது, இரத்தம் கொட்டியது.
அப்பொழுதுதான், எனக்கு புரிந்தது நான் உதைத்த உதை, கட்டிலுக்கு அருகில் உள்ள 'டி போ' வின் மேலிருந்த கண்ணாடியினால் பிரேம் செய்யப்பட்ட படங்களிலேயே பட்டுள்ளது என்று.
அந்த 'டி போ'வில், நானும் என்னுடைய மனைவியும் திருமண நாளன்று பிடித்துகொண்ட படங்களே இருந்தன. அந்த பிரேம் செய்யப்பட்ட படங்களில் இருந்த கண்ணாடி துண்டே, என்னுடைய காலின் நரம்பை பதம்பார்த்துவிட்டது.
அன்றிரவு என்னுடைய மனைவி, வீட்டில் இருக்கவில்லை. விருந்தாளி சென்றுவிட்டார்.
மனைவி திரும்பி வந்ததும் இந்த விடயம் தெரிந்தால், என்னை கனவில் உதைத்தற்கு கிடைத்த பரிசென்று, அவள் கிண்டல் செய்வாள் என்றும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago