2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பொம்மை கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘சக்கி டால்’ எனப்படும் பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரையும் அவருடன் இருந்த பொம்மையையும் மெக்சிகோ பொலிஸார் கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் போவோர் வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து கார்லோஸை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த அந்த பொம்மைக்கும் கைவிலங்கிட்டு கைது செய்தனர். இந்த விநோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்திய கார்லோஸ் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் உள்ளூர் நிருபர்கள் சிலர் விளையாட்டுத்தனமான அந்த பொம்மைக்கு கைவிலங்கு போடுமாறு கூறியதால், பொலிஸார் அதிகாரி ஒருவர் விளையாட்டாக அந்த பொம்மையையும் கைது செய்தததாகவும், தற்போது அந்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் மான்க்லோவோ பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட அந்த பொம்மை ‘சைல்ட்’ஸ் ப்ளே’ ஹாலிவுட் படவரிசையில் வரும் ‘சக்கி டா’ எனப்படும் பேய் பொம்மை ஆகும். விகாரமான முகம் கொண்ட இந்த பொம்மை உலக அளவில் பிரபலமானது. ’சைல்ட்’ஸ் ப்ளே 1,2,3, ‘கல்ட் ஆஃப் சக்கி’, ‘தி டால்ஹவுஸ்’, ‘கர்ஸ் ஆஃப் சக்கி’, ‘ப்ரைட் ஆஃப் சக்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இந்த பொம்மை இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X