Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் பொதுக்கூட்டத்தில் பெண் செய்தியாளர் மீது சோடாவை ஊற்றிய உயர் அதிகாரியின் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் சாட்டூகா கவுண்டியை சேர்ந்தவர் ஜேசன் வின்டர்ஸ். இவர் சாட்டுகா கவுண்டியின் ஆணையர் மற்றும் முதன்மை சட்ட உறுப்பினர் ஆவார். இவரது மனைவி அபே வின்டர்ஸ்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சாட்டுகா நிர்வாக அலுவலகத்தில் கவுண்டியின் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆணையர் ஜேசன் தலைமையில் பல்வேறு உயர் அதிகாரிகள் கூடியிருந்தனர். ஜேசனின் மனைவி அபேயும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அபே வின்டர்ஸ் திடீரென எழுந்து தனது அருகில் வைக்கப்பட்டிருந்த சோடாவை எடுத்து உள்ளூர் பத்திரிகையின் பெண் செய்தியாளர் கேசி பிரையாண்ட் தலையில் ஊற்றினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அபே வின்டர்ஸ் மீது ஒழுங்கற்ற நடத்தை மற்றும் தகாத முறையில் மற்றவரை தொடுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘அபே வின்டர்ஸ் கேசி மீது சோடாவை ஊற்றினார். ஆனால் கேசி ஏதும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். பின்னர் அபே, அவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என சற்று உரத்த குரலில் கூறினார்’, என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago