Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 15, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என உலகம் முழுவதும் சமத்துவம் பேசி வரும் நிலையில், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களுக்கு எதிரான சில பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த பழக்க வழக்கங்களை பாரம்பரியம் எனக் கூறி பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சில சமூக குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு விநோத பழக்க வழக்கம் இந்தியாவில் இருக்கும் கிராமம் ஒன்றில் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஐந்து நாட்கள் அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் ஆடை அணியக் கூடாது என்ற வழக்கம் தான் அது.
இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் மணிகாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம் பினி. இந்த கிராமத்தில் தான் இந்த விநோத வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. அதாவது மழைக்கால மாதமான சவான் மாதத்தில் குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்கு இந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் யாரும் எந்த உடையும் அணியக் கூடாது. அதை மீறி ஆடை அணிபவர்களுக்கு கெட்டது நடக்கும் என்று இன்றும் நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்த விநோத வழக்கத்தை அந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதை தங்களின் பாரம்பரிய வழக்கம் என்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள். இதற்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் மணிகாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள இந்த பினி கிராமத்தை சில பிசாசுகள் பிடித்திருந்ததாம்
அப்பொழுது லூனா கோத் தேவி அந்த கிராமத்திற்கு வந்ததும் பிசாசுகள் எல்லாம் அழிந்தது என்றும் அன்றிலிருந்து இந்த வழக்கம் கிராமத்திற்கு வந்தது என்றும், அதற்கு முன்னர் அழகாக ஆடை உடுத்தியிருந்த பெண்களை பிசாசுகள் பிடித்து செல்லும் என்றும், அதை நினைவில் வைத்து 5 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை இன்றும் அந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago