Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிருகமொன்று மனிதனை விழுங்கி விட்டால், அதன் வயிற்றுக்குள் இருந்து சில சேட்டைகள் செய்து உயிருடன் மீண்டும் வெளியில் வரும் காட்சிகள் கார்ட்டூன்களின் நாம் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இதுவெல்லாம் நடக்குமா என்று நாம் பல முறை கூறியிறுப்பதும் உண்டு.
ஆனால், அவ்வாறான சில காட்சிகளை உண்மையாக்கும் வகையில், திமிங்கிலமொன்றுக்கு இறையான மீனவர் ஒருவர், 3 நாட்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மீனவரே இவ்வாறு உயிருடன் மீண்டு வந்துள்ளார்.
இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளார். எனினும் தற்போது உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், திடீரென்று அவருடைய படகு கவிழ்ந்துள்ளது. இதனால், அவர் இராட்சத திமிங்கலமொன்று இறையானார்.
எனினும் திமிங்கிலம் அவரை அப்படியே முழுதாக விழுங்கியுள்ளது. இதனால் வயிற்றுக்குள் சென்ற மீனவர், திமிங்கலத்தின் கழிவுகளைச் சாப்பிட்டபடி மூன்று நாட்கள் உள்ளேயே இருந்துள்ளார். இதற்கிடையே மாயமான மீனவரை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் ஈடுபட்டிருந்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக முடிவு செய்துக்கொண்டு அவர்களுடைய தேடலை நிறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், திமிங்கலத்தின் கழிவுகளில் இருந்து குறித்த மீனவர் மயங்கிய நிலையில் கடற்கரையோரமாக ஒதுங்கியுள்ளார். உடனடியாக கடற்கரையோரமாக இருந்தவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டள்ளன.
மயக்கம் தெளிந்த மீனவர், 'கிட்டத்தட்ட 72 மணிநேரம், நான் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்தேன். நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான். நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வோட்டார் புரூப் கைக்கடிகாரத்தின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளை சாப்பிட்டேன். எனினும் அங்கிருந்த துர்நாற்றம் தாங்க முடியவில்லை. அந்த துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. நன்றாக குளித்தாலும் அந்த துர்நாற்றம் போகாது' என்று தெரிவித்துள்ளாராம். அப்ப பாருங்களேன்...!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago