Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோலாலம்பூர்,
திருமணம் எந்தவொரு தம்பதியினருக்கும் என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய நிகழ்வு.திருமணத்திற்குப் பின் புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக இருக்க தேனிலவு செல்வார்கள். ஆனால், திருமணமான உடனேயே ஒரு ஜோடி தேனிலவுக்குப் பதிலாக கல்லறையை அடைந்தால்?
அப்படிப்பட்ட ஒரு ஜோடியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை இருவரும் சேர்ந்து மயானத்தில் செய்தனர்.
மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான் மற்றும் அவரது மனைவி நூர் அஃபிஃபா ஹபீப்(26), டிசம்பர் 13 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்குப் பதிலாக, கணவனும் மனைவியும் கொரோனா முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர்.
திருமணமான முதல் வாரத்தில் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை செய்ய முடிவு செய்தனர். தேனிலவுக்கு பதிலாக கல்லறையில் கழிக்கும் இந்த முடிவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காங்குல்-கி குழுவில் உறுப்பினராக உள்ளார்,
திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறினார்.
இதை அவர் தனது மனைவியிடம் கூறினார், அதன் பிறகு அவரும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார். தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர், அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர்.
சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை தம்பதியினர் தகனம் செய்தனர். ரித்ஜீவன் அங்கம் வகிக்கும் குழுவில், சமூக சேவைக்காக அதனுடன் இணைந்த பலர் உள்ளனர். இவர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தாலும், சமூக சேவைக்காக இந்த குழுவிற்கு உதவுகிறார்கள்.
அதே நேரத்தில், இந்த குழுவுக்கான தங்கள் பணி இப்போதைக்கு நிற்கப் போவதில்லை என்று தம்பதியினர் தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் இதுவரை 15 உடல்களை எரித்துள்ளனர். இந்த ஜோடியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
6 hours ago
9 hours ago