2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ட்ரோனில் பறக்கும் ஹனுமான்

Menaka Mookandi   / 2015 ஜூலை 17 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோனி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பி வரும் 'சங்கேத்மோச்சன் மஹாபலி ஹனுமான்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக, ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்றில் ஹனுமான் பொம்மையை இணைத்து பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனி தொலைக்காட்சியில் 'சங்கேத்மோச்சன் மஹாபலி ஹனுமான்' என்ற தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு பிரபலம் சேர்க்கவும் மக்களிடையே விளம்பரத்தை எளிதாகக் கொண்டு செல்லவும் வித்தியாசமான ஐடியாவை இது களம் இறக்கியது.

அதன்படி, ட்ரோன் ஒன்றில் ஹனுமான் பொம்மையை இணைத்து பறக்கும் ஹனுமானாக பல நகரங்களில் அதை பறக்க விட்டு மக்களை கவர்ந்திழுத்தது. சஞ்சீவி மலையை அனுமார் தூக்கிச் செல்வது போல இந்த பறக்கும் ஹனுமான் காணப்பட்டார்.

லக்னோ, அலகாபாத், நாக்பூர், வாரணாசி, இந்தூர், போபால், புனே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இந்த ட்ரோன் ஹனுமான், மக்கள் கவனத்தை ஈர்த்தார். பலர் செல்போனில் இந்த ஹனுமான் படத்தை படம் பிடித்தனர். திடீரென நடு ரோட்டில் ஹனுமான் பறந்து வந்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X