2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

டாகாசனம் செய்யும் நாய்கள்

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதையாவது செய்து உலகச் சாதனை படைக்கவேண்டும் என்று மனிதர்கள் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நாங்களும் வருவோம் என்று நாய்களும் முண்டியடித்துக்கொண்டு வந்துள்ளன என்றால் பாருங்களே.

இந்நிலையில், உலகச் சாதனைக்காக ஒரே இடத்தில் தங்களது எஜமானர்களுடன் 270 நாய்கள் அமர்ந்து யோகாசனம் செய்த சாகச நிகழ்ச்சி ஹாங்காங் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு ஹாங்காங் நகரில் நாய்களுக்கும் யோகாசன பயிற்சி மையம் நடத்தப்படுகிறதாம். சுஸெட் அக்கெர்மென் என்பவர் நடத்தும் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 270 நாய்கள், தங்களது எஜமானர்களுடன் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தன.

டாகாசனம் (Dog Asanam) என்று அழைக்கப்படும் இக்கலையை காலை நீட்டியும் மடித்தும், தலையை திருப்பியும் இந்த நாய்கள் செய்துகாட்டியதை நாய்களின் உரிமையாளர்களுடன் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு இரசித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X