Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரிய கிரகணத்தின்போது இளம் பெண்களை நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை காரணமாக நேபாளில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை. ஆனால், நேபாளத்தில் இருந்து முயற்சி செய்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், எனக்கு போஜ்புரி திரைப்படத் துறையில் பலரைத் தெரியும், நான் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன், நீ அழகாக இருக்கிறாய், என்னுடன் வந்தால் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று அழைத்துள்ளார்.
இதை நம்பிய அந்த இளம் பெண், இந்தியா செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர்கள் வாகனத்தில் 6 பேர் ஏறியுள்ளனர்.
இதற்கிடையே, இளம் பெண் ஒருவரை கடத்திக்கொண்டு இந்தியா செல்ல ஒரு கும்பல் தயாராக உள்ளது என்று நேபாள பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் வந்து அனைவரையும் அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, நேபாள பெண் தான் சினிமாவில் நடிக்கும் ஆசையால் வந்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த பெண்மணியிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சூரிய கிரணத்தின்போது பலி கொடுக்க இந்த பெண்ணை கடத்திவந்ததை ஒப்புக்கொண்டார். யாருக்காக இப்படி இளம் பெண்களை கடத்திவந்தார், இதுபோன்று பூஜைகள் முன்பும் செய்யப்பட்டதா என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தல் கும்பலிடமிருந்து பணம், அலைபேசி, கடனட்டைகள், காசோலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago