2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கொவிட் தொற்றின் ‘கடுமையான கட்டம்’ முடிவுக்கு

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்றுநோயின் கடுமையான கட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டின் நடுப்பகுதியில் உலக அளவில் 70 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்படுமாயின் கொவிட் தொற்றின் கடுமையான கட்டம் உண்மையில் முடிவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

“எனினும் அதனை செய்வது நம் கையில் உள்ளது. இது முக்கியமான விடயம். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X