Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
J.A. George / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி நேற்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் இந்த போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உலக அழகி போட்டியில் பங்கேற்க இருந்த பல அழகிகள் மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
போட்டியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
போட்டி தொடங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் நேற்று இரவு இந்த அறிவிப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.
அத்துடன், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அழகிப் போட்டி நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020 மிஸ் வோர்ல்டு இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் மானசா வாரனாசி. இவர் சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago
22 Dec 2024