Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் வனராஜ். 50 வயதான இவர் தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை அவர் மூன்றாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலைவேளை படுக்கையறையில் அவரது மனைவி உடலில் இரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த அவர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு வனராஜிடமும் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர் .
இதன்போது ‘சம்பவ தினத்தன்று இரவு வனராஜூம், அவரது மனைவியும் மது அருந்தியுள்ளனர் எனவும், பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் வலுக்கட்டாயமாக தனது கையில் இருந்த டோர்ச்லைட்டை, மனைவியின் உறுப்பில் வைத்து அழுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிறப்புறுப்பில் இருந்து அதிகளவிலான ரத்தம் வெளியேறியே அவர் இறந்துள்ளார் எனப் பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தபொலிஸார் , வனராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago