Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 06 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில் கணவரை உதறித் தள்ளிவிட்டு மாமனாரைப் பெண்ணொருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்த தனது தந்தையைக் கண்டுபிடித்துத் தருமாறு பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரளித்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணைக் காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
எனினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்திலேயே பிரிந்துள்ளனர்.
இதற்கிடையில், காணாமல் போன தந்தையை குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞரின் தந்தை விவாகரத்து பெற்ற தனது மகனின் மனைவியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் இது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளார். எனவே இரு தரப்பினரையும் வரவழைத்து காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில், தனது இரண்டாவது கணவருடன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago