Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 26 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏயார் இந்தியா என்பது இந்தியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமாகும்.
இந் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து ‘எஸ்.பி.சிங் ஓபராய்‘ என்பவரைச் சுமந்து கொண்டு தன்னந்தனியாக டுபாய்க்குப் பறந்த சுவாரஸ்யமான சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தொழிலதிபரான குறித்த நபர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ” விமானத்தில் ஏறியதும், விமானப் பணியாளர்கள் தவிர, நான் மட்டுமே இருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஒரு மகாராஜாவைப் போல உணர்ந்தேன். எனினும் சக பயணிகள் இல்லாததால், பின்னர் எனக்குச் சலிப்பு ஏற்பட்டு விட்டது. இந்த மூன்று மணிநேரப் பயணத்தை முற்றிலும் அற்புதமான, மறக்கமுடியாத பயணமாக மாற்றிய சிறப்புச் சேவைகளுக்காக ஏயார் இந்தியாவுக்கு நன்றி," என்றார்.
இது குறித்து ஏயார் இந்தியா நிறுவனத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்” ஒருவர் மட்டுமே டுபாய்க்குச் செல்லப் பயணச் சீட்டைப் பெற்றதால் ஆரம்பத்தில், அவரது பயணச் சீட்டை இரத்துச் செய்ய முடிவு செய்தோம்.ஆனால், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டது உட்படப் பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் தலையீட்டால், அவரை மட்டுமே அழைத்துச் செல்ல முன்வந்தோம் ”எனத் தெரிவித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
47 minute ago
1 hours ago