2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உலகின் முதலாவது முழு முகமாற்று சிகிச்சை

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கையின் படைப்பினை மனிதன் மாற்றுவதில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறான். மாற்றமுடியாத எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே புதிது புதிதாக பல மாற்றங்களை உருவாக்கி வருகிறான் மனிதன்.

அண்மையில் பிரான்ஸில் ஓர் அரிய மாற்றமொன்றை மருத்துவர் ஒருவர் செய்திருக்கிறார். ஜெரோம் என்ற 35 வயதுடைய நபருக்கு மரபணுக் கோளாறினால் முகம் விகாரமாகக் காணப்பட்டது. இதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்த ஜெரோம், டொக்டர் லோரன்ட் லான்டியரி (Laurent Lantieri) என்பவரை அணுகி தனது முகத்திற்கு சிகிச்சையளிக்குமாறு வேண்டினார்.

அவரது வேண்டுகோளை சவாலாக எடுத்துக்கொண்ட மருத்துவர் தனது மருத்துவ குழுவுடன் சத்திர சிகிச்சைக்குத் தயாரானார். இறந்துபோன ஒருவரது முகத்தினை எடுத்து பாதிக்கப்பட்டவரின் முகத்திற்கு ஏற்றவிதத்தில் பிளாஸ்டிச் சிகிச்சை செய்திருக்கிறார்.

மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட முகமாற்று சிகிச்சை என்ற பெருமையையும் தட்டிச் சென்றிருக்கிறது. விகாரமான முகத்தினைக் கொண்டிருந்த ஜெரோம் இப்பொழுது புன்சிரிப்போடு காணப்படுகிறார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .