Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர் ஒருவர் தனது உயிர் நண்பனின் தலை மற்றும் அந்தரங்க உறுப்பைத் துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிர் நண்பர்களான நவீன் மற்றும் ஹரிஹர கிருஷ்ணா.
தனியார் கல்லூரியொன்றில் கல்விகற்று வந்த இவர்கள், அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியைக் காதலித்து வந்துள்ளனர்.
முதலில் நவீன் தனது காதலை அம்மாணவியிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அம்மாணவியும் அவரது காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.
இதன் பின்னர் வெகுநாட்கள் கழித்து கிருஷ்ணா குறித்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
நவீனின் காதலை விட்டு பிரிந்து பல மாதங்கள் ஆனதையடுத்து, கிருஷ்ணாவின் காதலுக்கு அம்மாணவி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், தனது முன்னால் காதலியை மறக்க முடியாமல் தவித்த நவீன், அம்மாணவிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதும், குறுஞ்செய்தி அனுப்புவதும் எனத் தொடர்ந்தும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அம்மாணவி தனது காதலனான கிருஷ்ணாவிடம் தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அவர், நவீனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.இதற்காக கடந்த 3 மாதங்கள் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 17ஆம் திகதி நவீனைத் தனியாக ஆள்நடமாட்டமற்ற பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணா, அவருக்கு மது அருந்தக் கொடுத்து பின்னர் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
குறிப்பாக ‘நவீனின் தலை, கை விரல்கள் மற்றும் பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளதோடு உடலையும் இரண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்துள்ளார்.
பின்னர் இது குறித்த புகைப்படத்தை தனது காதலிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இக்கொலை நடந்து 9 நாட்கள் ஆன நிலையில் கிருஷ்ணா நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, கிருஷ்ணனைக் கைது செய்த பொலிஸார் அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago