2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

இப்படியும் ஒரு விடுப்புக் கடிதமா?

Ilango Bharathy   / 2023 மார்ச் 30 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மின்சார சபை ஊழியரொருவரின் விநோத விடுப்புக் கடிதமொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக அரசு துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் விடுப்புத்  தேவை என்றால் குறிப்பிட்ட காரணங்களை கூறி விடுப்பு பெற்றுக் கொள்வது வழக்கம்.

 அதுபோல் விடுப்புக்கான காரணத்தை பொறுத்தே விடுமுறைக்கு அனுமதி அளிப்பது உண்டு. இந்நிலையில் புதுக்கோட்டை  மின்சார சபையில் பணியாற்றும் உதவி மின் பொறியியலாளர் ஒருவர் ‘ஒரு நாள் விடுப்பு கோரி உயர் அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்தில், "கடந்த சில வாரங்களாக பணியாளர்கள், மின்சார சபையினாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், அதிலிருந்து மீண்டு வந்து பணிகளை செவ்வனே தொடரும் வகையில் மன அமைதியை வேண்டி எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்யவுள்ளேன். எனவே எனக்கு ஒரு நாள் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 இக்கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இதுபோன்ற காரணங்களுக்கு விடுப்பு தர முடியாது எனக் கூறி அதனை நிராகரித்தனர். தியானம் செய்ய விடுப்பு கேட்ட மின்சார சபை அதிகாரியின் இந்த வினோத விடுப்பு கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X