Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2022 மே 08 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிவ் இன் உறவில் இருந்த காதலனுக்கு தெரியாமல், உடலுறவின் போது பயன்படுத்திய ஆணுறையில் ஓட்டை போட்ட காதலிக்கு, ஆறுமாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. காதலனை ஏமாற்றிய குற்றத்திற்காக அப்பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜெர்மனில் உள்ள புகழ்பெற்ற நகரமான ப்யல்பெல்ட்டில் வசிக்கும் வசிக்கும் 42 வயதான ஆணுடன், 39 வயது பெண், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் போல, பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் என்ற உறவில் இருந்துள்ளார்.
பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் உடல் தேவைகளுக்காக ஆண் பெண் நண்பர்களாக இணைந்து வாழ்வது ஆகும், இருவரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்லைனில் சந்தித்த நிலையில் பின்னர் ஒன்றாக இனைந்து வாழ தொடங்கினர்.
அந்தப் பெண் இளைஞரை மிகத் தீவிரமாகக் காதலித்த நிலையில் அவருடன் தொடர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால் அவரது காதலன் திருமணம் செய்யவோ, தொடர்ந்து அந்த பெண்ணுடன் உறுதியான உறவில் இருக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இருந்தும் அவரை பிரிய மனமில்லாமல் இருந்த அந்த பெண் அவரை தனது கைக்குள் வைத்துக் கொள்ள விரும்பியுள்ளார்.
தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என நினைத்த அந்த பெண், தனது காதலன் உடலுறவின் போது பயன்படுத்துவதற்காக தனது அறையில் வைத்திருந்த ஆணுறை பாக்கெட்டுகளில் ரகசியமாக ஓட்டை போட்டுள்ளார்.
ஆணுறையில் ஓட்டை போட்டால் தான் கர்ப்பம் ஆகி குழந்தை பிறந்தால் அவர் தன்னுடன் வாழ்வார் என நினைத்துள்ளார். அவரது முயற்சிகள் பலனளிக்காத நிலையில், விதி வேறு மாதிரி விளையாடியது.
இந்நிலையில் தனது காதலனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய அப்பெண், தான் கர்ப்பமாக இருப்பதாவும், வேண்டுமென்றே ஆணுறைகளில் ஓட்டை போட்டதால் தான் கருவுற்றிருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் அப்பெண்ணை தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு உண்மையாக இல்லாமல் மோசடி செய்ததாகவும் அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த பெண் பின்னர் தனது காதலனை ஏமாற்றியதையும் ஆணுறையில் ஓட்டை போட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் எந்த பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உறுதியாக தெரியவில்லை.
இருந்தும் தனது காதலனை ஏமாற்றும் விதமாக திருட்டுத்தனமான செயலை புரிந்த குற்றத்திற்காக பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என குறிப்பிட்ட நீதிபதி, உடலுறவில் "திருட்டுத்தனம்" என்பது ஒருவகையில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு என்பது தான் பொருத்தமானது என்றும், " பொதுவாக உடலுறவின் போது ஒரு ஆண் தனது துணைக்கு தெரியாமல் தனது ஆணுறையை ரகசியமாக அகற்றுவது குற்றம் என்ற நிலையில், ஆண்களுக்கு தெரியாமல் ஆணுறைகளை அகற்றுவதோ அல்லது ஓட்டை போடுவதோ குற்றம் தான் என கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago
06 Apr 2025