2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

Ilango Bharathy   / 2022 மார்ச் 03 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராணுவத்தில் முதல் முறையாக தமிழ் நடிகையொருவர் இணைந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த 2021 ஆம்  ஆண்டு வெளிவந்த‘ காதம்பரி ‘ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ‘அகிலா நாராயணன்‘.

அமெரிக்காவில் வசித்துவரும் அவர் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால், தனியாக முயற்சிசெய்து  தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

இந்நிலையில் அவருக்கு அமெரிக்க இராணுவத்திலும் இணைய வேண்டும் என ஆர்வம் காணப்பட்டதாகவும், அதற்காகப்  பல மாதங்களாகக்  கடுமையாகப்  பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக பட்டம் பெற்றுள்ளதாகவும், தற்போது அமெரிக்க இராணுவ வீரர்களின்  சட்ட ஆலோசகர் பணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X