2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

காந்தி பட இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பாரோ காலமானார்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'காந்தி' என்ற புகழ்பெற்ற ஆங்கில படத்தை இயக்கிய இங்கிலாந்தின் பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரிச்சர்ட் அட்டன்பரோ தனது 90 வயதில் காலமானார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்று திரைப்படமான 'காந்தி' 1982ஆம் ஆண்டு அட்டன்பரோவுக்கு, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட எட்டு ஒஸ்கர் விருதுகளை பெற்று தந்தது.

1926 ஆண்டு பிறந்த இவர், தனி அடையாள இயக்குநராக திகழ்ந்தார்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர்,  ஞாயிற்றுகிழமை காலமானார்.

11 படங்களை இயக்கியுள்ள ரிச்சர்ட் அட்டன்பரோ, 'த கிரேட் எஸ்கேப்', 'ஜுராசிக் பார்க் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

இவர் இதுவரை 13 படங்களைத் தயாரித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்ற இவர் பிரிட்டன் அரசால் லார்ட் அங்கீகாரமும் பெற்றார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய நோக்கங்களை பரப்பும் நல்லெண்ணத் தூதராகவும் இவர் தொழில்புரிந்தார்.
அட்டன்பாரோவின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இறங்கல் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X