2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

ஓரின சேர்க்கையாளருக்கு தலாய் லாமா ஆதரவு

A.P.Mathan   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா ஆதரவு தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறார் தலாய் லாமா. தற்போது இவர் அமெரிக்காவில் சுற்று பயணம் செய்து வருகிறார். வொஷிங்டனுக்கு வந்த தலாய் லாமாவை அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர். அங்கு, இணையத்தினூடாக தலாய் லாமா அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓரின சேர்க்கையாளர் திருமணம் குறித்து தேவையில்லாத அச்சங்கள் உள்ளன. காதல் மிகவும் அழகானது. ஒத்திசைவு உள்ள 2 பேர் இணைந்து உறவு கொள்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது. மேலும் ஓரின சேர்க்கை விவகாரம் தனிப்பட்ட அந்தரங்கமான விஷயம். இருவரும் ஏற்றுக் கொண்டு, இருவரும் திருப்தியுடன், முழு சம்மதத்துடன் இருந்தால் அது சரிதான். மேலும், பாலியல் உறவுகளை தங்களது மதத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே மக்கள் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருதரப்பினரின் விருப்பங்களும் முழுமையான சம்மதத்துடன் நடந்தால் அது சரிதான். அதேநேரத்தில் அவர்களை கொடுமைப்படுத்துவது, தவறாக பயன்படுத்துவது போன்றவை மனித உரிமையை மீறிய குற்றங்களாகும். இவ்வாறு தலாய் லாமா கூறியுள்ளார். (தினகரன்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .