2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

ஆண்டின் சிறந்த மனிதர் போப் பிரான்ஸிஸ்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்த ஆண்டின் சிறந்த மனிதராக, பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். டைம் பத்திரிகை நடத்திய தேர்விலேயே போப் பிரான்ஸிஸ் தெரிவாகியுள்ளார்.

கடந்த ஒன்பது மாதங்களாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருக்கும் போப் பிரான்ஸிஸ், மனசாட்சியின் புதிய குரலாக உருவெடுத்துள்ளார் என்று அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில், சர்வதேச அரங்கில் புதிதாக நுழைந்த ஒருவர் இந்த அளவுக்கு விரைவாக கவனத்தை ஈர்ப்பது மிகவும் அபூர்வமானது என்று அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் நான்சி கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

வறுமை, செல்வம், உலகமயமாதல் மற்றும் இதர முக்கியமான விடயங்கள் குறித்த விவாதங்களில் போப் பிரான்ஸிஸ் அவர்கள் தன்னை மையப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கார்டினல்கள் குழுவொன்றால் பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் அவர் போனஸ் ஏரிஸ் நகரின் பேராயராக இருந்தார். அமெரிக்கப் பகுதியிலிருந்து தேர்தெடுக்கப்படும் முதலாவது பாப்பரசரும் இவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .