2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நெல்சன் மண்டேலாவுக்கு நுரையீரல் தொற்று நோய்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

94 வயதான நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் தலைநகர் பிரிடோறியாவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு முன்னர் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மக் மஹாராஜ் தெரிவித்துள்ளார். நெல்சன் மண்டேலா இந்த நோய்க்கு உரிய முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இவரது தேக ஆரோக்கியம் முன்னேற்றம் கண்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் தங்கியுள்ளமை தென் ஆபிரிக்க மக்களுக்கு கவலையை உண்டுபண்ணியுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.  

நெல்சன் மண்டேலா வயிற்றுவலி காரணமாக கடைசியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதய நோய்க்கு நெல்சன் மண்டேலா சிகிச்சை பெற்றிருந்தார். 

தொடர்புடைய செய்தி

நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X