2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

ஜூலியன் அசேன்ஜுக்கு ஈக்குவடோரில் அரசியல் புகலிடம்

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா உட்பட பல நாடுகளின் இரகசிய தகவல்களை அம்பலமாக்கி, பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசேன்ஜுக்கு  தென் அமெரிக்க நாடான  ஈக்குவடோர் அரசியல் புகலிடம் அளித்துள்ளது.

அசேஞ்சுக்கு எதிராக சுவீடனில் நடைபெற்ற பாலியல் வல்லுறவு வழக்கொன்றில் அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிரிட்டனில் தங்கியிருந்த அசேன்ஞ், தன்னை சுவீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தார். தான் சுவீடனுக்கு சென்றால் அமெரிக்க அதிகாரிகளால் மோசமான விசாதரணைக்கு உட்படுத்தப்படலாம் என அவர் கூறினார்.

எனினும் அவரின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் இரு மாதங்களுக்குமுன் அசேன்ஞ் தஞ்சம் புகுந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசேன்ஜின் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ஈக்குவடோர் அரசாங்கம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அசேன்ஜின் மனித உரிமைகள் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக ஈக்குவடோர் தெரிவித்துள்ளது.
அசேன்ஜை கைது செய்வதற்காக ஈக்குவடோர் தூதரகத்திற்குள் நுழைவதற்கான பகிரங்க அச்சுறுத்தலை பிரிட்டன் ஏற்படுத்துவதாக, ஈக்குவடோர் வெளிவிவகார அமைச்சர் றிக்கார்டோ பட்டினோ குற்றம் சுமத்தியுள்ளார்.

தனக்கு அரசியல் புகலிடம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க வெற்றி என அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசேன்ஜ் தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரக அதிகாரிகளுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X