2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மனைவியுடன் தங்கியமைக்காக ஒலிம்பிக்கிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் உலக சம்பியன்

Super User   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூறு மீற்றர் ஓட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான கிம் கொலின்ஸ், அதிகாரிகளின் அனுமதியின்றி தனது மனைவியை சந்திக்கச் சென்றமைக்காக லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் நாட்டைச் சேர்ந்த கிம் கொலின்ஸ், 2003 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலக சம்பியன்ஸிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் சம்பியனானவர். சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் நாட்டின் முன்னிலை விளையாட்டு வீரரான அவரே, லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பவிழாவில் தனது நாட்டு தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.

ஆனால் தனது நாட்டு ஒலிம்பிக் குழு அதிகாரிகளின் அனுமதியின்றி விளையாட்டுக் கிராமத்திலிருந்து வெளியேறி, தனது மனைவியுடன் ஹோட்டலொன்றில் தங்கிருந்தார். அதனால் அவர் 100 மீற்றர் ஓட்டத்திலிருந்து விலக்கப்பட்டார்.

இதனால், நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டத்தின் ஆரம்பச் சுற்றில் கிம் கொலின்ஸ் பங்குபற்றவில்லை.
இதையடுத்து 200 மி;றர் ஓட்டப்போட்டி மற்றும் 100 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டிகளிலிருந்தும் கிம் கொலின்ஸ் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

100 மீற்றர் போட்டியில் தான் ஓடப்போவதில்லை என்பதை  டுவிட்டர் இணையத்தளம் மூலம்  ஏற்கெனவே கிம் கொலின்ஸ் அறிவித்திருந்தார்.

ஓலிம்பிக் கிராமம் அழுத்தம் மிகுந்ததாக இருந்தது எனவும் இதனால் ஓட்டப்போட்டிக்கு முன்னதாக மன அழுத்தமின்றி அமைதியாக இருப்பதற்காக மனைவியுடன்தங்கியிருந்தாகவும் அவர் கூறினார்.

"சிறைக்கைதிகளுக்கு கூட தமது மனைவியை சிறைச்சாலைக்கு அழைத்து சந்திக்கும் உரிமை உள்ளது"  என அவர் ஆத்திரத்துடன் கூறினார்.

"நான் பொய்சொல்லவில்லை. இன்றிரவு 100 மீற்றர் போட்டியில் நான் ஓடமாட்டேன்","மெமக்ஸிகோவில் நான் ஓடுவதைக் கண்ட அனைவருக்கும் அதுதான் எனது நாட்டை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கடைசி போட்டி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்."

'சில பெண்களுடன் சுற்றித்திரிந்துவிட்டு உரிய நேரத்தில் திரும்பி வந்திருந்தால் எனக்கு அதிஷ்டம் கிட்டியிருக்கும். அவர்கள் எனது அணிக்காக எனது மனைவியை கைவிடுமாறு கேட்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது' என  வானொலியொன்றுக்கு  அளித்த பேட்டியில் கிம் கொலின்ஸ் கூறினார்.

"100 மீற்றர் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. லண்டனில்  சுற்றுலா பயணிபோல் நடந்து திரிய முடியாது. நான் தாயகம் செல்ல வேண்டும்" என அவர் கூறினார்.

36 வயதான கிம் கொலின்ஸ் ஏற்கெனவே 4 தடவை ஒலிம்பிக் விளையாட்டுவிழாவில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வருடம் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் அவர் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார்.






You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன்-அமான் Monday, 06 August 2012 04:15 PM

    ஆமா.. அது சரி... சொந்த மனைவியோடு தங்கியது தப்புத்தான். எங்கேயாவது சின்ன வீடு செட் பண்ணி அதுல போயி தங்கியிருக்கனும். இந்த ஓட்ட வீரருக்கு அது தெரியாம போச்சி..பாவம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X