2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்ல கல்மாடிக்கு அனுமதி மறுப்பு

A.P.Mathan   / 2012 ஜூலை 25 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி - ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதை டெல்லி உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இன்னொரு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே தற்போது அவ்வுத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின் படி சுரேஷ் கல்மாடி உத்தியோகபூர்வ ரீதியாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியோ அல்லது உத்தியோகபூர்வமாகவோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது. அத்தோடு 27ஆம் திகதி வரை அவர் இந்தியாவை விட்டும் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தனிப்பட்ட ரீதியாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட இந்த உத்தரவு மூலம் தடை விதிக்கப்படவில்லை. எனினும் 27ஆம் திகதி ஆரம்ப விழா இடம்பெறவுள்ள நிலையில் சுரேஷ் கல்மாடியால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா ஏற்பாட்டின் போது ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் சீர்கேடுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி ஒரு வருடகாலம் சிறையில் தனது காலத்தைக் கழித்திருந்தார்.

27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராகவும், ஆசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராகவும், சர்வதேச தடகள அமைப்பின் உறுப்பினராகவும் தான் காணப்படுவதன் காரணமாக தன்னை லண்டன் செல்ல அனுமதிக்குமாறு கோரி சுரேஷ் கல்மாடி செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் லண்டன் செல்ல முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X