2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

கவிஞர் கண்ணதாசன் மனைவி மரணம்

Menaka Mookandi   / 2012 மே 30 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவியரசர் கண்ணதாசனின் மனைவி பொன்னம்மா ஆச்சி தனது 79ஆவது வயதில் இன்று சென்னையில் காலமானார். தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற பாடலாசிரியராக, இலக்கிய உலகில் கவியரசராக, எழுத்தாளராகத் திகழ்ந்தவர் அமரர் கண்ணதாசன்.

அவரது முதல் மனைவி பொன்னம்மாள் ஆச்சி, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று காலை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் மரணமடைந்தார்.

அவருக்கு கண்மணி, சுப்பு உட்பட மூன்று மகன்களும், அலமேலு, சொக்கலிங்கம் உட்பட 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X