2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

கெளரவிக்கப்படுகிறார் சச்சின் டெண்டுல்கர்

A.P.Mathan   / 2012 மே 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கொல்கத்தாவில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மும்பை இன்டியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் நாளன்று போட்டிக்கு முன்னதாக மேற்கு வங்க கிரிக்கெட் சபையால் சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்படவுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் நூறு சர்வதேச சதங்களைப் பெற்ற சச்சின் டெண்டுல்கர், அதன் பின்னர் தொடர்ந்தும் பல்வேறு பிரிவினரால் கௌரவிக்கப்பட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக மேற்கு வங்கக் கிரிக்கெட் சபையினால், அதன் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மேற்கு வங்க விளையாட்டு அமைச்சர் மதன் மித்ரா, கௌரவிக்கும் நிகழ்வு தொடர்பாக நேற்றைய தினம் சச்சின் டெண்டுல்கருக்கு மின்னஞ்சலொன்றை அனுப்பியதாகவும், அவர் அந்த நிகழ்விற்கு வருவதாக ஏற்றுக்கொண்டதோடு, கௌரவிப்பு நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், சரித்திரப் புகழ்மிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதலமைச்சரால் கௌரவிக்கப்படுவது தனக்கு மிகுந்த கௌரவமாக அமையும் எனக் கருதுவதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்ததாக மதன் மித்ரா தெரிவித்தார்.

சச்சின் டெண்டுல்கரை கௌரவிப்பது தொடர்பாக மகிழ்ச்சியுடன், எதிர்பார்ப்புடனும் காணப்படுவதாகத் தெரிவித்த மதன் மித்ரா, அவரது 100 சர்வதேசச் சதங்கள் என்ற மாபெரும் சாதனையை அதற்குரிய வகையில் கௌரவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X