2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

மகளுக்காக ரசிகர்களை முகத்தில் குத்தினார் ஷகிப் அப்ரிடி

A.P.Mathan   / 2012 மார்ச் 24 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அப்ரிடி, தனது ரசிகர்கள் சிலரது முகத்தில் குத்தியுள்ளார். ஆசியக்கிண்ணப் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி நாடு திரும்பும் போது பாகிஸ்தானின் கராச்சி விமானநிலையத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் கராச்சி விமானநிலையத்தினூடாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது - ஷகிப் அப்ரிடி தனது காரை நோக்கிச் சென்றார். அப்போது அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகவும், புகைப்படங்களை எடுப்பதற்காகவும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்தனர். அப்போது கோபமடைந்த ஷகிட் அப்ரிடி, அங்கிருந்த ரசிகர்கள் சிலர் மீது தனது கையால் குத்தினார். ஷகிட் அப்ரிடியின் சகோதரர் குறுக்கிட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுத்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஷகிட் அப்ரிடி, யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அதைச் செய்யவில்லை எனவும், தனது மூன்று வயதான மகள் கூட்டத்தின் நடுவே சிக்கியதை அடுத்தே தான் கோபமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவையும் அங்கு காணப்படவில்லை எனத் தெரிவித்த ஷகிட் அப்ரிடி, வீரர்களிடம் கையெழுத்துப் பெறவும், புகைப்படங்களை எடுக்கவும் ரசிகர்கள் முயல்வது வழமை எனவும் தெரிவித்ததோடு, ஆனால் இம்முறை அவர்கள் கட்டுப்பாட்டை மீறியதாகவும், தனது மகள் காயப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.(க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0

  • ummpa Sunday, 25 March 2012 07:56 PM

    மகளுக்கு என்பது உண்மைக்கு புறம்பானது. இவருக்கு நல்ல ஆப்பு வைப்பார்கள் அவரின் ரசிகர்கள்.

    Reply : 0       0

    rinx Monday, 26 March 2012 05:21 AM

    என்னமோ அந்த இடத்தில நின்று பார்த்த மாதிரி சொல்றிங்களே...
    உங்கள மாதிரி ஆட்களால் தான்... .........

    Reply : 0       0

    ummpa Monday, 26 March 2012 07:04 PM

    RINX , ஆதிகாலத்து மனிதனா நீங்கள்! உடன் கூகிள் தெரியுமா உங்களுக்கு இல்லாவிட்டால் KG படிக்கின்ற பிள்ளைகளிடம் தெரிந்து இந்த கதை பற்றி தேடுங்கள் புரியும். பத்திரிகைக்கு கருத்து எழுத எப்படி அப்பு.

    Reply : 0       0

    David Monday, 26 March 2012 11:46 PM

    எல்லாம் தலை கணம் தான்.

    Reply : 0       0

    உன்னைப்போல் ஒருவன் Tuesday, 27 March 2012 04:48 AM

    கோபத்தில் செய்திருப்பார் அப்ரிடி... மற்றபடி நல்ல மனுஷன் அவர்...

    Reply : 0       0

    M.A.A.Rasheed Thursday, 29 March 2012 11:48 PM

    இவர் எல்லாம் ஏன் பார்க்க வேண்டும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X