Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 மார்ச் 10 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் அதிவேக மனிதர் என பெயர் பெற்ற ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட நட்சத்திரமான ஹுஸைன் போல்டை தோற்கடிப்பதற்கு ஓட்ட வீரர்கள் அனைவரும் திணறிக்கொண்டிருக்க, பிரித்தானிய இளவரசர் ஹரி விநோதனமான வழியொன்றை கண்டுபிடித்துள்ளார்.
100, 200 மீற்றர் போட்டிகளில் உலக சாதனையாளரான ஹுஸைன் போல்டை இந்த வழியை பயன்படுத்தி குறுந்தூர போட்டியொன்றில் 'வென்று' காட்டினார் இளவரசர் ஹரி.
போட்டி ஆரம்பிக்கும்முன் ஹஸைன் போல்ட் மறுபக்கம் திரும்பும்வரை காத்திருந்து திடீரென ஓட ஆரம்பிப்பதுதான் அந்த வழி.
தனது தயாரான 2ஆம் எலிஸபெத் மகாராணியார் பிரித்தானிய அரசியாக முடிசூடி 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கரிபியன் மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அவர் ஜமைக்காவுக்கு சென்றபோது உலகின் அதிவேக மனிதரான ஹுஸைன் போல்ட் சகிதம் ஜமைக்கா மெய்வல்லுநர்களுடனான சந்திப்பொன்றில் பங்குபற்றினார். அப்போது, 100 மீற்றர் 200 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனான ஹi{ஸன் போல்ட்டுடன் 30 மீற்றர் தூர ஓட்டப் போட்டியொன்றிலும் இளவரசர் ஹரி பங்குபற்றினார்.
27 வயதான ஹரிக்கு குறுந்தூர ஓட்ட நுணுக்கங்கள் சிலவற்றை போட்டிக்கு முன்பாக 25 வயதான ஹுஸைன் போல்ட் கற்றுக்கொடுத்தார்.
ஆனால் போட்டியின் போது, தானே கண்டறிந்த சில நுணுக்கங்களை வைத்திருப்பது தெரிந்தது. இருவரும் வரிசையில் நின்றிருந்தவேளை, போல்ட் மறுபுறம் திரும்பிய சமயம் பார்த்து திடீரென ஓட ஆரம்பித்தார் இளவரசர் ஹரி. போல்ட் அதிர்ச்சியில் நின்றிருக்க, எல்லைக்கோட்டை கடந்த ஹரி கைகளை விரித்து வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார்.
இளவரசர் ஹரியின் வேடிக்கையை பார்த்து சிரித்த ஹை{ன் போல்ட் இது தொடர்பாக பின்னர் பேசுகையில், 'அவர் மோசடிசெய்துள்ளார.; லண்டன் ஒலிம்பிக் போட்டியில் என்னுடன் மீண்டும் மோதுமாறு கேட்டேன். ஆனால் தான் பிஸி என அவர் கூறுகிறார்' என்றார்.
'அவருக்கு சில ஓட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளேன். அதை அவர் தனது நாட்டிலுள்ளவர்களுக்கு கற்பிக்ககூடும்' எனவும் ஹுஸைன் போல்ட் கூறினார்.
ஜமைக்காவின் தேசிய பச்சை, கறுப்பு, மஞ்சள் நிறங்களிலான ஆடையுடன் இப்போட்டியில் ஹரி பங்குபற்றினார். (படங்கள் ஏ.எவ்.பி.; வீடியோ : (பிபிசி)
Jeewan Sunday, 11 March 2012 01:21 AM
ஆஹா.... லண்டன் ஒலிம்பிக்கில ஓட்ட பந்தய வீரர்கள் இந்த டெக்னிக்க கடைப்பிடிக்கலாமோ?
Reply : 0 0
a m m shaheed Sunday, 11 March 2012 04:47 AM
sabaash iwar oru puthiya wingyaani.
shaheed
Reply : 0 0
Rinos Tuesday, 13 March 2012 03:24 PM
மேற்கத்தேய நாட்டின் அரசியல் வாரிசுதானே, மற்றவர்களின் வளங்களை எடுத்து (சூறை ஆடி)அவர்களது இடத்திலேயே அவர்களுக்கு ஆப்பு அடிப்பது. இதுதான் அன்று தொட்டு இன்று வரைக்கும் நடக்கிறது.. இதற்கு முடிவு ஒருநாள் வரும் ... அது அவர் உலகில் மீன்றும் தோன்றும் நாளாகலாம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago