2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிவூட் நடிகர் ஜோன் ஆப்ரஹாம் கைது

Super User   / 2012 மார்ச் 09 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல பொலிவூட் நடிகர் ஜோன் ஆப்ரஹாம் மும்பை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு மும்பை நகரப் பகுதியில்  ஒழுங்கீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு மும்பை பந்ரா நகர நீதவான் நீதிமன்றம் 2010 ஒக்டோபர் மாதம் 15 நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கு எதிராக ஜோன் ஆப்ரகாம் மும்பை நீதிமன்றமொன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். எனினும் அத்தீர்ப்பை நிராகரிக்க மும்பை நீதிமன்றம் மறுத்தது. அதையடுத்து ஜோன் ஆப்ரஹாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

நடிகர் ஜோன் ஆப்ரஹாமின் பிணை மனு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எனினும் அம்மனுமீதான விசாரணை முடியும்வரை அவர் தடுத்துவைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X