Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 05 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றால் இந்திய வீரர்களுக்கு நிர்வாணமாக போஸ்கொடுக்கத் தயார் என அறிவித்த இந்திய மொடல் அழகி பூனம் பாண்டே இப்போது மீண்டும் அத்தகைய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இங்கிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி வெற்றிபெறும் ஒவ்வொரு போட்டிக்கும் தனது ஏறத்தாழ நிர்வாண புகைப்படமொன்றை அவர் வெளியிடுவாராம்.
உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுக்கத் தயார் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் 20 வயதான பூனம் பாண்டே. ஆனால் இந்திய அணி உலகக்கிண்ணத்தை வென்றபோது அவர் ஏறத்தாழ காணாமல் போயிருந்தார். அவரின் தொலைபேசி செயலிழந்திருந்தது.
தான் எங்கும் ஓடி ஒளியவில்லை எனவும் நிர்வாண போஸ் கொடுப்பதற்கு எதிராக தன்னை சிலர் அச்சுறுத்தியதால் தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்ததாகவும் பூனம் பாண்டே அண்மையில் கூறினார்.
இப்போது இந்திய அணி இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் பங்குபற்றி வருகிறது. இன்று செவ்வாய்கிழமை இரண்டாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில் பூனம் பாண்டே நேற்று தனது புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ட்விட்டர் இணையத்தளத்தில் முக்கால் நிர்வாண கோலத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், இத்தொடரில் இந்திய அணி வெல்லும் ஒவ்வொரு போட்டியின்போதும் இத்தகைய படங்கள் வெளியாகும் என கூறியுள்ளார்.
"எனது உத்வேகத்துடன் நான் நீடித்திருப்பதை உலகம் பார்க்கும். எனது அணி இங்கிலாந்தை தோற்கடிக்கும் என்பது எனக்கு நிச்சயம். எமது நேரம் வந்துவிட்டது. இங்கிலாந்தை அவர்கள் வெல்லும் ஒவ்வொரு போட்டியின்போதும் மேலும் படங்கள் வெளிவரும். ஆனால் இப்போது அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கான ஒன்று இது" என பூனம் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியுற்றது. 20 போட்டியிலும் அவ்வணி தோல்வியுற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
KLM Tuesday, 06 September 2011 08:55 PM
கிளம்பிட்டாயா கிளம்பிட்டா...
Reply : 0 0
Hot water Wednesday, 07 September 2011 02:43 AM
இந்திய அணி வென்றால் அதை சாட்டாக வைத்து ஆடை அவிழ்த்து போஸ் கொடுக்க பார்க்கிறார் பூனம் பாண்டே.
Reply : 0 0
Nirmalalraj Wednesday, 07 September 2011 05:22 AM
கலி காலம்
Reply : 0 0
ram Wednesday, 07 September 2011 08:30 PM
இந்த செய்தியை வாசிக்கின்றபொழுது எனக்கென்றால் இந்திய அணியை வெல்ல வைப்பதற்காக அல்ல. தோற்கடிப்பதற்காக போடும் வேசம் போல் தெரிகிறது.
Reply : 0 0
xlntgson Wednesday, 07 September 2011 09:52 PM
விளம்பரத்துக்காக காட்டினால் மட்டும் போதுமா? தொழில், நடிப்புத் தானே! பாசாங்கு! கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விடலாம்!
Reply : 0 0
Nallavan Thursday, 08 September 2011 01:36 PM
பெண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் இது போன்றவர்களை என்னவென்று சொல்வது.
உடம்பையும் சூதாட்டமாக்கி விட்டார்கள்.
Reply : 0 0
reemco Thursday, 08 September 2011 02:35 PM
இந்திய செக்ஸ் நடிகை பிரியா ராய் போல் ஆவதற்கு பூனம் பாண்டே முயற்சி செய்கிறார் என்பது தெளிவு. அதற்கு அவர் ஒரு துரும்பு சீட்டாகவே இந்திய கிரிகெட் அணியை தெரிவு செய்திருப்பது தான் வியப்பாகவும் கவலையாகவும் உள்ளது.
Reply : 0 0
rishimathav Thursday, 15 September 2011 04:24 AM
பிரியா ராய் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்???????
அவர் ஒரு சமூக சேவகி.................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
8 hours ago