Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மே 08 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொலிவூட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
63 வயதான ஆர்னோல்ட் 2003 நவம்பர் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை கலிபோர்னியா மாநில ஆளுநராக பணியாற்றினார். தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் மீண்டும் தனது பழைய தொழிலுக்கு திரும்பி வரப்போவதாக அறிவித்துள்ளார்.
3 திரைப்படங்களில் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ் நெகர் நடிக்கவுள்ளதாக அவரின் பேச்சாளரான அலன் மென்டல்சன் தெரிவித்துள்ளார். 'கிறை மச்சோ' எனும் படத்தில் நடிப்பதற்கு ஆர்னோல்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக ஆர்னோல்ட்டுக்கு 12.5 மில்லியன் டொலர் ஊதியம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஆர்னோல்ட்டின் புகழ்பெற்ற திரைப்படமான 'டேர்மினேட்டர்' திரைப்படத் தொடரின் புதிய பாகத்திலும் ஆர்னோல்ட் நடிக்கவுள்ளதாக மென்டல்சன் கூறுகிறார். 'த லாஸ்ட் ஸ்டான்ட்' படத்திலும் ஆர்னோல்ட் நடிப்பார் எனக்கூறப்படுகிறது.
எனினும் இத்திரைப்படங்களை தயாரிப்பதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை. இதனால் எந்த படம் முதலில் வெளியாகும் எனக் கூறமுடியாது என்கிறார் மென்டல்சன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago